முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா
ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் 8-ந் தேதி நடக்கிறது.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா 8-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு தேர் ரதவீதிகளில் யானையுடன் கொடி பட்டம் பவனியாக கொண்டுவரப்பட்டு காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. கொடியினை நடேசன் ஏற்றுகிறார். திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலையில் சமய மாநாடு, இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருநாளில் வாணவேடிக்கையுடன் அம்மன் தேரோட்டம் நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று காலையில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை முத்தாரம்மன் கோயில் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story