"என் அப்பாவை கருணை கொலை செஞ்சிடுங்க"...அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய மகன் - விழுப்புரத்தில் பரபரப்பு


என் அப்பாவை கருணை கொலை செஞ்சிடுங்க...அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய மகன் - விழுப்புரத்தில் பரபரப்பு
x

என் அப்பாவை கருணை கொலை செஞ்சிடுங்க என அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தனது தந்தையை மருத்துவர்கள் சரி வர கவனிக்காததால், தந்தையை கருணை கொலை செய்து விடுங்கள் என கூறி மகன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

விக்கிரவாண்டி அருகே மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது தந்தை உடல் நலம் சரியில்லாத காரணத்தால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மருத்துவர்கள் தனது தந்தையை சரி வர கவனிக்கவில்லை என்றும், இது குறித்து கேட்ட தனது தாயை மருத்துவர்கள் ஒருமையில் திட்டுவதாகவும் கூறி கிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இது குறித்து மருத்துவமனை முதல்வர்களிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த அவர், தனது தந்தையை கருணை கொலை செய்து விடுங்கள் எனக் கூறி குடும்பத்துடன் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.




Next Story