என் குப்பை, என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


என் குப்பை, என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

வால்பாறை நகராட்சி சார்பில் என் குப்பை, என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகராட்சி சார்பில் என் குப்பை, என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுதிமொழி

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரங்களின் தூய்மைக் கான மக்கள் இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறையை தூய்மையாக வைப்பதற்கு உதவும் வகையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சார்பில் சுற்றுலா கார், வேன் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதற்கு வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலை மை தாங்கினார். ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். தங்களின் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிக்கூடங்களை தூய்மையாக வைப்போம்.

என் குப்பை, என் பொறுப்பு என்பதன் அடிப் படையில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தூய்மைப்பணி

இதையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கு நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ச்சியாக அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதையும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் மேற்பார்வையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணர்வு பயணம் மற்றும் சிறப்பு முகாம்கள் வால்பாறை முழுவதும் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் நடத்தப்படும்.

குப்பைகளை அகற்றும் பணிக்கு வால்பாறை பகுதி மக்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நடத்துபவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நகரின் தூய்மை பணி குறித்து லாட்ஜ், காட்டேஜ், தங்கும் விடுதி உரிமையா ளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வால்பாறை தூய்மையான நகராட்சியாக உருவாக்க உதவ வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் பாலு தெரிவித்துள்ளார்.


Next Story