3 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல்


3 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

3 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பகுளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி அழகர்சாமி கூறுகையில், எங்கள் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை தண்ணீர் முறையாக தூர்வாரப்படாததால் கண்மாய் நிரம்பி வீடுகளில் வைகை தண்ணீர் மற்றும் அதனுடன் கழிவு நீர் சூழ்ந்தது. இதனால் ஆங்காங்கே பள்ளங்களில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகின்றன. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.


Next Story