திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகமாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனையில் குவியும் குழந்தைகள்


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகமாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனையில் குவியும் குழந்தைகள்
x

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் பரவும் காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் பரவும் காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவுவதால் அதனைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story