மதுபோதையில் உரிமையாளர் தூங்கியபோது வீடு புகுந்து 4½ பவுன் தங்கநகைகளை திருடிய மர்ம நபர்கள்


மதுபோதையில் உரிமையாளர் தூங்கியபோது வீடு புகுந்து 4½ பவுன் தங்கநகைகளை திருடிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் உரிமையாளர் தூங்கியபோது வீடு புகுந்து 4½ பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை: ஆனைமலை அடுத்த துறையூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி யசோதா லட்சுமி. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 22-ந் தேதி யசோதா தனது தாய், அண்ணன்கள், பிள்ளைகளுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். இதனால் வீட்டில் இவரது கணவர் சரவணன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டின் உள்தாழ்ப்பாள் போடாமல் சரவணன் தூங்கியுள்ளார்.

அப்போது வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த 4½ பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பிசென்றுவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story