கோழி கழிவுகளை கிணற்றில் வீசிச்சென்ற மர்ம நபர்கள்
கடைசிகுளம் கிராமத்தில் உள்ள கிணற்றில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு சொந்த விவசாய கிணற்றில் மர்ம நபர்கள் கோழி கழிவு, இறைச்சிகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
கோழி கழிவு, இறைச்சிகளை கிணற்றில் வீசிச்சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story