நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 6:46 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என விருதுநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என விருதுநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தலுக்கு இணங்க விருதுநகர் கலெக்டர்அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க. கரைந்து விடும் என்று சொன்னவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் பிரதமர் மோடியின் பக்கத்தில் அமரும் அளவிற்கு தன்னையும், கட்சியையும் வளர்த்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற வில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த நலத்திட்டங்களை முடக்கி விட்டனர் அ.தி.மு.க.வின் நலத்திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக தம்பட்டமடித்துக் கொள்கின்றனர். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட இரண்டு அமைச்சர்களை விடுவித்தார். ஆனால் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார்.

பாடம் புகட்டுவார்கள்

தி.மு.க. அரசு உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது. மக்கள் அனைத்து நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட அவை தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மான்ராஜ் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எதிர்கோட்டை சுப்பிரமணியம், மணிமேகலை, ராஜவர்மன், சந்திரபிரபா, சிவசாமி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமதுநயினார் ,ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சரவணன் குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் குரு சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story