நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2023 4:45 AM IST (Updated: 1 Oct 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தேனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பிரேம்சந்தர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்துக்கான உரிமையை மத்திய அரசு பெற்றுக்கொடுக்கவில்லை என்று கூறியும், காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story