நாடார் உறவின் முறை சங்க ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவின் முறை சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவின் முறை சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம், அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் நடராஜன் வழிக்காட்டுதலின் பேரில் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தினகர், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இனி மாதந்தோறும் சங்க கூட்டம் நடத்தப்படும். சங்கத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். சங்க ஆண்டு விழா நடத்தப்படும். சங்க உறுப்பினர்களை மதுரை நாடார் மகாஜன சங்கத்தில் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சங்கத்தின் மூலம் நமது சங்க மாணவ-மாணவிகளுக்கு உயர்படிப்புக்கு ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி மாவட்ட தலைவர் வரதராஜ், பொதுச் செயலாளர் செல்வகுமார், செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் செந்தில்வேல் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.