நாகராஜர் கோவிலில் நாக பஞ்சமி திருவிழா


நாகராஜர் கோவிலில் நாக பஞ்சமி திருவிழா
x
தினத்தந்தி 21 Aug 2023 9:45 PM GMT (Updated: 21 Aug 2023 9:45 PM GMT)

கோத்தகிரி அருகே நாகராஜர் கோவிலில் நாக பஞ்சமி திருவிழா நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கீழ் அனையட்டி கிராமத்தில் நாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாக பஞ்சமி நாளான நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த நாளில் நாக தேவதைகள், கருடாழ்வாரை வழிபடுவதால் அனைத்து விதமான சர்ப்ப தோஷங்கள், பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதையொட்டி காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நாகராஜருக்கு அபிஷேக பூஜை, மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை அலங்கார பூஜை நடந்தது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாகராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நாக பஞ்சமி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும் நாக பஞ்சமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.


Next Story