நாகை அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நாகை அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

3 மாத ஊதியம் வழங்கக்கோரி நாகை அரசு கல்லூரி பேராசிரியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை செல்லூர் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக இயங்கி வந்த கல்லூரிகள் கடந்த 2020-ம் ஆண்டு உயர்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனால் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவது நிலுவை உள்ளது.கடந்த ஜூன் முதல் ஆகஸ்டு் வரை 3 மாதங்கள் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 3 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி நாகை அரசு கல்லூரி பேராசிரியர்கள் நேற்று முன்தினம் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேராசிரியர்கள் பணிக்கு செல்லாததால் மாணவர்கள் வகுப்புகளில் இருந்து வெளியேறினர்.வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 3 மாத ஊதியம் வழங்கக்கோரி நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கல்லூரிக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story