நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x

தேர்வு கட்டணத்தை குறைக்கக்கோரி நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதி பாசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சிவசக்தி முன்னிலை வகித்தார். கல்லூரி தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தும் தேதியை நீட்டிக்க வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும். கஜா புயலின் போது உடைந்து, ஆபத்தான நிலையில் கல்லூரி கட்டிடத்தின் மேல் கிடக்கும் கண்ணாடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

...



Next Story