நாகியம்பட்டி ஜல்லிக்கட்டில்வருவாய்த்துறையினரை மிரட்டியதாக தி.மு.க. கவுன்சிலர் மீது புகார்


நாகியம்பட்டி ஜல்லிக்கட்டில்வருவாய்த்துறையினரை மிரட்டியதாக தி.மு.க. கவுன்சிலர் மீது புகார்
x

நாகியம்பட்டி ஜல்லிக்கட்டில் வருவாய்த்துறையினரை மிரட்டியதாக தி.மு.க. கவுன்சிலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம்

தம்மம்பட்டி,

தம்மம்பட்டி அடுத்துள்ள நாகியம்பட்டியில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த தம்மம்பட்டி 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வரதன் என்ற வரதராஜன் வருவாய்த்துறையினரிடம் தகராறு செய்துள்ளார். இதை பார்த்த போலீசார் அவரை எச்சரித்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் அரசு பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறையினரிடம் தகராறு செய்த தம்மம்பட்டி தி.மு.க. கவுன்சிலர் வரதராஜன் மீது நாகியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அனிதா தம்மம்பட்டி ேபாலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வரதராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் இதுகுறித்து கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் கூறும் போது, 'ஜல்லிக்கட்டு விழா மேடையில் இருந்த ஆத்தூர் உதவி கலெக்டர் மற்றும் வருவாய் துறையினரிடம் தம்மம்பட்டி தி.மு.க. கவுன்சிலர் வரதராஜன், தகாத வார்த்தையால் பேசி ரகளை செய்ததால் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது' என தெரிவித்தார்.






Next Story