நாகூர் அரசு ஆஸ்பத்திரியை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை
நாகூர் அரசு ஆஸ்பத்திரியை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாகூர்:
நாகூர் அரசு ஆஸ்பத்திரியை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு
நாகை அருகே நாகூரில் உள்ள ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஆஸ்பத்திரி கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், மருத்துவ சேவை குறித்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும்
இதனை தொடர்ந்து அமைச்சரிடம், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் நாகூரில் புதிய ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், பழுதடைந்த நாகூர் ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரியை இடித்து விட்டு அங்கு புதிதாக ஆஸ்பத்திரி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கோரிக்கை மனு
பின்னர் சுற்றுலாத்தலமாக விளங்கும் நாகூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அமைச்சரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.