நாகூர் ஹாஜி நூர் சாஹிப் தைக்கால் கந்தூரி விழா


நாகூர் ஹாஜி நூர் சாஹிப் தைக்கால் கந்தூரி விழா
x

நாகூர் ஹாஜி நூர் சாஹிப் தைக்கால் கந்தூரி விழா

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் நாகூரில் ஹாஜி நூர் சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைக்கால் டிரஸ்டி உபைதுல் ரஹ்மான் சாஹிப் சிறப்பு துவா ஓதினார். பின்னர் பாய்மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நூர்ஷா தைக்கால் முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர்.


Next Story