நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.49.21 லட்சம் உண்டியல் காணிக்கை


நாமக்கல்  ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.49.21 லட்சம் உண்டியல் காணிக்கை
x

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.49 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.49 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்டியல் திறப்பு

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இவை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் நேற்று துணை ஆணையாளர் (நகை சரிபார்ப்பு) ரமேஷ், கோவில் செயல் அலுவலர் இளையராஜா, ஆய்வாளர் சுந்தர், கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன.

ரூ.49.21 லட்சம் காணிக்கை

அந்த உண்டியலில் ரூ.49 லட்சத்து 21 ஆயிரத்து 265 ரொக்கம், 33 கிராம் தங்கம், 1,098 கிராம் வெள்ளி இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டபோது அந்த உண்டியலில் ரூ.48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரொக்கம், 49 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story