நாமக்கல் மாவட்டத்தில், 3 நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில், 3 நாட்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு  ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தின் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தின் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 2 மி.மீட்டரும், நாளை (வெள்ளிக்கிழமை) 8 மி.மீட்டரும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 34 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும், நாளை மறுநாளும் மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

மிதமான மழை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே மழைக்காலங்களில் கோழிப்பண்ணைகளில் ஈக்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் ஈக்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story