அதிக வரி பாக்கி வைத்த 100 பேரின் பெயர் பட்டியல்
கோவை மாநகராட்சிக்கு செலுத்தாமல் அதிக வரி பாக்கி வைத்த 100 பேரின் பெயர் பட்டியலை தயாரித்து வரி வசூலிக்க அதி காரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை
கோவை மாநகராட்சிக்கு செலுத்தாமல் அதிக வரி பாக்கி வைத்த 100 பேரின் பெயர் பட்டியலை தயாரித்து வரி வசூலிக்க அதி காரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
5½ லட்சம் வரிதாரர்கள்
கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளிலும் மொத்தம் 5 லட்சத்து 46 ஆயிரத்து 611 பேர் சொத்து வரி செலுத்துபவர்களாக உள்ளனர்.
வரும் நிதியாண்டு மார்ச் மாதத்துடன் முடிவ டையும் நிலையில் சொத்து வரியாக ரூ.344 கோடி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ரூ.197 கோடி ரூபாய் மட்டுமே வரி வசூலாகி உள்ளது. இது 60 சதவீதத்துக்கும் குறைவாகும்.
எனவே வரி வசூலை தீவிரப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி வரி செலுத்துபவர்களின் வீடுக ளுக்கு காலை 7 மணி முதல் காலை 10 மணிவரையும், மாலை 4 மணிக்கு மேல் சென்றும் மாநகராட்சி ஊழியர்கள் வரி வசூலில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.
தினமும் ரூ.5 கோடி வரை வரி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை பலர் மாநகராட்சிக்கு செலுத்தாததால் கோடிக்கணக்கில் நிலுவைத் தொகை உள்ளது.
இதனால் மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது.
100 பேர் பட்டியல்
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வரிவசூல் தொடர்பாக முக்கிய இடங்களில் அறிவிப்புகள் செய்யப்படுகிறது.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் அதிக நிலுவை தொகை வைத்து உள்ள 100 பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கப்படும். பின்னர் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.