நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துங்கள்அனைத்து துறையினருக்கு கலெக்டர் பழனி உத்தரவு


நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துங்கள்அனைத்து துறையினருக்கு கலெக்டர் பழனி உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 'நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பிரசார இயக்கம் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் சுகாதாரத்துடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின்கீழ் தூய்மைப்பணி மேற்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு" திட்ட விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின்கீழ் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை தூய்மைப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

விழிப்புணர்வு பணிகள்

இத்திட்டத்தின் மூலம் ஊராட்சியில் உள்ள பஸ் நிலையம், பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால், குடிநீர் தொட்டிகள், அங்கன்வாடி மையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தூய்மைப்பணிகளும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், மாற்றுப்பொருட்களை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு பணிகளும், சுய உதவிக்குழுவினர் மூலம் வீடுகள், நிறுவனங்களில் தண்ணீர், சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பணிகளும், சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்த விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து 'நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின்கீழ் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story