ஆலப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஆலப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

ஆலப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் செயல்பாட்டை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

அவருடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி குழுத்தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் நிந்திமதி திருமலை, ஆலப்பாக்கம் ஊராட்சித்தலைவர் பரிமளா ஜெய்சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியகுழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் வி.எஸ்.ஆராமுதன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்ப அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வக்குமார், மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மை பணிகளை தொடங்கி வைத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். மேலும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், மக்கும் குப்பை, மக்காத குப்பை எப்படி தரம் பிரித்து தர வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய் கிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் ஜெகதீஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story