காவேரிப்பாக்கம், நெமிலியில் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு கூட்டம்


காவேரிப்பாக்கம், நெமிலியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு கூட்டம்
x

காவேரிப்பாக்கம், நெமிலியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம், நெமிலியில் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சியிலும் தூய்மையான குடிநீர் வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டம் கொண்டுவரப்பட்டது.

நேற்று காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டாயுதபாணி, சையுப்தீன், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் நெமிலியில் நடைபெற்ற கூட்டத்தில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story