நந்தீஸ்வரர் தாங்கள் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்


நந்தீஸ்வரர் தாங்கள் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்
x

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள நந்தீஸ்வரர் தாங்கள் குளத்தை கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.

செங்கல்பட்டு

இது குறித்து நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி கூறியதாவது:-

இந்த திட்டத்தின் கீழ் நந்தீஸ்வரர் தாங்கள் குளத்தில் உள்ள சேறு சகதிகள், கழிவு நீரை வெளியேற்றி குளத்தை முழுமையாக தூர்வாரி குளக்கரைகளை பலப்படுத்தி குளத்தில் மண் சரிவு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் குளத்தை சுற்றிலும் கற்கள் பதித்து குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. மேலும் குளக்கரையில் நடைப்பாதை அமைத்து நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் மின்விளக்குகள் அமைத்து, ஓய்வெடுக்கும் வகையில் குளத்தை சுற்றிலும் ஆங்காங்கே அமர இருக்கை வசதி செய்யப்பட உள்ளது.

இவ்வாறு நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

ந்தீஸ்வரர் தாங்கள் குளம் சீரமைப்பு பணிகளை நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம். கே.டி.கார்த்திக், நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை பார்வையிட்டனர்.


Next Story