ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தெரிந்தது..!


தினத்தந்தி 21 July 2023 8:41 PM GMT (Updated: 23 July 2023 10:21 AM GMT)

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தெரிந்தது.

சேலம்

மேட்டூர்:-

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தெரிந்தது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை கட்டுமான பணிக்கு முன்பு தற்போது அணையின் நீர் தேக்க பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் இருந்தன. அதில் பண்ணவாடி கிராமமும் ஒன்று. இந்த பண்ணவாடி கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம், ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்து இருந்தன.

அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கிறிஸ்தவ ஆலய கோபுரமும், கோவில் நந்தி சிலையும் தண்ணீரில் மூழ்கி விடும். தண்ணீர் குறையும் போது கோபுரம் மற்றும் நந்தி சிலை வெளியேதெரியும்.

நந்தி சிலை தெரிந்தது

அந்த வகையில் கடந்த 12-ந் தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்ததால் கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது. நேற்று அணையின் நீர்மட்டம் 70 அடியாக குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது. இதை காண சுற்றுலா பயணிகள் இந்த பகுதியில் படையெடுத்த வண்ணம்உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story