நன்னிலம் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நன்னிலம் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 15 Sept 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து நன்னிலம் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

நன்னிலம்:

மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து நன்னிலம் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

நன்னிலம் அரசு கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், இதை கண்டித்தும் நன்னிலம் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் மருது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கூடுதல் கட்டணம்

திருச்சி மண்டலத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

கூடுதலாக வசூலித்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும், இல்லை என்றால் இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். மேலும் இக்கல்லூரியில் அடிப்படை வசதியான குடிநீர் மின்சாரம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story