'டிரோன்' மூலம் நானோ யூரியா தெளிப்பு


டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் பற்றாக் குறையை சமாளிக்க விளைநிலங்களில் ‘டிரோன்’ மூலம் நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு புதிய யோசனை வழங்கப் படுகிறது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

தொழிலாளர் பற்றாக் குறையை சமாளிக்க விளைநிலங்களில் 'டிரோன்' மூலம் நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு புதிய யோசனை வழங்கப் படுகிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆனைமலை ஒன்றிய பகுதியில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதற்கு ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு மூலம் பாசன வசதி கிடைக்கிறது.

இந்த நிலையில் உரமிடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களது சிரமத்தை போக்கும் வகையில் 'டிரோன்'(ஆளில்லா குட்டி விமானம்) மூலம் நானோ யூரியா உரம் தெளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான செயல் விளக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் கோவை மாவட்டத்தில் முதன் முறையாக ரமணமுதலிபுதூரில் நடைபெற்றது.

500 மில்லி நானோ யூரியா

இதுகுறித்து செயல்விளக்கம் அளித்த நீர் நுட்ப மைய பேராசிரியர் செல்வகுமார் கூறியதாவது:-

நானோ யூரியா உரமானது இலை வழியே ஊடுருவி வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கிறது. மேலும் 8 சதவீத விளைச்சலை அதிகரிக்கிறது. 500 மில்லி நானோ யூரியா, ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கும். ஏக்கருக்கு 500 மில்லி நானோ யூரியா மற்றும் 20 மில்லி ஒட்டு பசை போதுமானது. நெல் மட்டுமின்றி தென்னை, பந்தல் காய்கறி போன்ற அனைத்து வகையான பயிருக்கும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன், அதிகாரி கரீம் ராஜா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story