கழிப்பிடங்களில் நாப்கின் எரிக்க எந்திரம்


கழிப்பிடங்களில் நாப்கின் எரிக்க எந்திரம்
x
தினத்தந்தி 20 Jun 2023 3:15 AM IST (Updated: 20 Jun 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பேரூராட்சி கழிப்பிடங்களில் நாப்கின் எரிக்க எந்திரம் பொருத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சி சார்பில், நகரின் முக்கிய பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 3 இடங்களில் பொது கழிப்பிடங்களும், 14 கிராமங்களில் சமுதாய கழிப்பிடங்களும் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கழிப்பிடங்களில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளில் இலவசமாக நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் பயன்படுத்திய நாப்கின்கள் எரிக்கும் சிறிய அளவிலான எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்தநிலையில் தற்போது பொது கழிப்பிடங்களில் பெரிய அளவிலான நாப்கின்கள் எரிக்கும் நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்படி, ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள கழிப்பிடத்தில், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மேற்பார்வையில் நேற்று நாப்கின்கள் எரிக்கும் புதிய எந்திரம் பொருத்தப்பட்டது. இதே போல மற்ற கழிப்பிடங்களிலும் நவீன எந்திரம் பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story