யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா


யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா
x

யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. வன்னிய குல சமுதாயத்தினரால் நடத்தப்படும் 5-ம் நாள் திருவிழாவான நாச்சியார் திரு கோலம் (யாளி வாகனம்) விழா நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு பல்லக்கில் சென்ற நரசிம்ம பெருமாள் செங்குன்றம், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம், பாரதியார் தெரு, மண்டப தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அருள்பாலித்த நரசிம்ம பெருமாள் இரவு 8 மணியளவில் கோவிலை வந்தடைந்தார். பின்னர் திருமஞ்சனம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நரசிம்ம பெருமாள் இரவு 11.45 மணியளவில் யாளி வாகனத்தில் மேள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையும் நான்கு மாடவீதிகளில் திருவீதி உலா வந்தார். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.. விழாவிற்கான ஏற்பாடுகளை அஞ்சூர் தகில் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி வன்னிய குல சத்தியர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story