கஞ்சா விற்பனையில் சிக்கிய வாலிபரிடம் போதை பவுடர் பறிமுதல்
கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்பனையில் கைதான வாலிபரிடம் இருந்து போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்பனையில் கைதான வாலிபரிடம் இருந்து போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாலிபர் கைது
கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கண்ணனாகம் சந்திப்பு வழியாக ரோந்து சென்றனர். அப்போது, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போதை பவுடர் பறிமுதல்
விசாரணையில், வள்ளவிளையை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் அனீஷ் (வயது 24) என்பதும், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இவர் மீது மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, கஞ்சா வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து 100 கிராம் பிரவுன் சுகர் வகையை சேர்ந்த போதை பவுடரையும் போலீசார் பறிமுதல் செய்து அதை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதை பவுடர் எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.