நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம்


நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம்
x

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றார். துணைத் தலைவர் தனபால் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

கூட்டத்தில் 14-வது வார்டு உறுப்பினர் குருசேவ் தனது வார்டில் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது என்றார். அதற்கு பதிலளித்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என். கே.ஆர்.சூரியகுமார் தற்போது மின்சார கட்டணம் அதிகளவில் வருவதால் தினசரி குடிநீர் வழங்குவது கடினம். பேரூராட்சிக்கு போதுமான வருவாய் இல்லை என பதில் அளித்தார். இதனால் கவுன்சிலருக்கும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பிறகு உறுப்பினர்கள் தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். தொடர்ந்து பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சிக்கு உட்பட்ட தம்பா தெருவில் மண் சாலையாக உள்ளதை தார் சாலையாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு தலைவரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.


Next Story