தலைவாசல் அருகே நத்தக்கரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்


தலைவாசல் அருகே   நத்தக்கரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

தலைவாசல் அருகே நத்தக்கரை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

சேலம்

தலைவாசல்,

தலைவாசல் அருகே நத்தக்கரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி அம்மனுக்கு சக்தி அழைத்து காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணி அளவில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம் ஊர்வலமும் நடந்தது. பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு பால் பன்னீர், இளநீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இதில் தலைவாசல், பெரியேரி, சித்தேரி, ஆறகளூர், புத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்டத்தையொட்டி, பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டத்தில் கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி, தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, தலைவாசல் ஒன்றிய அட்மா குழு தலைவர் சாத்தப்பாடி மணி என்ற பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story