நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம்


நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 1:15 AM IST (Updated: 27 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம், அதன் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சரவணகுமார், துணைத்தலைவர் மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 2-வது தவணையாக பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி, இளநிலை உதவியாளர் அழகர்சாமி மற்றும் அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story