தேசிய பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்


தேசிய பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்
x

நெல்லை பல்கலைக்கழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமும் இணைந்து பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்து 5 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. நடந்தது. நிகழ்ச்சியில் வரலாற்று துறை தலைவர் செல்வராஜூ வரவேற்றார். தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி குமார்ரேகா கருத்தரங்கு குறித்து விளக்கம் அளித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில் "இந்தியாவில் பருவ நிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரழிவுகள் ஏற்படுகிறது. இயற்கை சீற்றத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதும், அந்த இடங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்வதும் பற்றி இளைஞர்களும், முதியோர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பேரழிவு பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் நமது பல்கலைக்கழகமும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த பயிற்சி பட்டறை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவன அதிகாரிகள் சந்தோஷ் குமார், பாலு, ஆராய்ச்சி மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பேரிடர் கண்காட்சி, பேரிடர் விழிப்புணர்வு பயிற்சிகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக பேராசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story