தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்
தொடர் மழை காரணமாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்
ராணிப்பேட்டை
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் சென்றுள்ளனர். இந்த நிலையில் கேரள மாநில நிர்வாகம் வேண்டு கோளுக்கிணங்க அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து குழுவுக்கு தலா 25 பேர் வீதம் மேலும், ஐந்து குழுவினர் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அதிநவீன மீட்பு கருவிகளுடன், மீட்புப்படை வாகனத்தில் சென்றனர்.
Related Tags :
Next Story