தேசிய திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி தேசிய திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு விலக்கு உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய திராவிட கழகத்தின் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் கலந்து கொண்டவர்கள் என்.எல்.சி. விவகாரத்தில் நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்க வேண்டும், அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும், விரைவு சாலை அமைக்க கிராவல் அனுமதி வழங்கியது மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கல்குவாரிகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தடுக்க வேண்டும், ஐ.எப்.எஸ், ஆருத்ரா நிதிநிறுவன மோசடி விவகாரங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அல்லது அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் முரளி, மாவட்ட நிர்வாகிகள் முத்தமிழன், கோவர்தனன், வேலு, பழனி, நகர பொறுப்பாளர்கள் ராஜா, வடகால் சங்கர், செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.