அரை கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
அரசியல் கட்சி கம்பங்களில் அரை கம்பத்தில் பறந்த தேசியக்கொடிகளை போலீசார் அகற்றினர்
கோயம்புத்தூர்
கோவை திருச்சி ரோடு ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் மாநக ராட்சி மருந்தகம் உள்ளது. இதன் அருகே அ.தி.மு.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கொடிக்கம்பங்கள் உள்ளது.
அதன் உச்சியில் அ.தி.மு.க., ஆர்.எஸ்.எஸ் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அந்த கொடிக்கம்பங்களின் நடுவில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி கட்டப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் சென்றது.
உடனே போலீசார் விரைந்து சென்று, அவமதிக்கும் வகையில் அரைக்கம்பத்தில் கட்டிய தேசியக்கொடிகளை அகற்றினார்கள்.
மேலும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் கட்டியது யார்? என்பது குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல வாலாங்குளம் இரும்புத்தூணில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி அகற்றப்பட்டது. அரை கம்பத்தில் தேசியக்கொடி கட்டப் பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story