வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற விழிப்புணர்வு
வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற விழிப்புணர்வு
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
75-வது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் அனைவரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இந்த நிலையில் நாடு முழுவதும் தபால் துறையினர் மற்றும் இதர மத்திய அரசு துறையினர் பிரபாத் பேரி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.
அதன்படி பொள்ளாச்சி தபால் துறையினர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை தேசிய கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர். இதற்கு பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தபால் நிலைய அலுவலர் முனிராஜ் முன்னிலை வகித்தார்.
பேரணியில் வீடுகள்தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும், அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனைக்கு உள்ளது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story