அ.தி.மு.க.வினர் தேசிய கொடியேற்றி மரியாதை
நெல்லை வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க.வினர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
திருநெல்வேலி
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றி கொண்டாடி வருகிறார்கள். அதன்படி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகளும் தங்களது வீடுகளில் தேசிய கொடியேற்றும் வகையில் தேசிய கொடிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், பொருளாளர் சவுந்தரராஜன், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story