100 கிலோ கோலப்பொடியில் தேசியக்கொடி-மதுரை சிறுமிகள் சாதனை


100 கிலோ கோலப்பொடியில் தேசியக்கொடி வரைந்து மதுரை சிறுமிகள் சாதனை படைத்தனர்.

மதுரை

பேரையூர்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னக்கட்டளையை சேர்ந்தவர்கள் பிரபாகர்-சுவிதா தம்பதி. ஓவியத்தில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், கலாம் மற்றும் ஆசியா ரெக்கார்ட் என 9 சாதனைகளை பிரபாகர் படைத்துள்ளார். இவருடைய குழந்தைகள் ஹர்சாலி பாக்கியா (வயது 8), சஞ்சோலி பாக்கியா(3).

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்த 2 சிறுமிகளும் தங்கள் வீட்டு மாடியில் தேசியக்கொடியை வரைந்து சாதனை படைக்க முயற்சி எடுத்தனர். அதன்படி 100 கிலோ கோலப்பொடி மூலம் 7 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்டதாக தேசியக்கொடி வரைந்தனர். அதன் நடுவே 2.10 மீட்டர் விட்டத்தில் 24 ஆரங்களுடன் கூடிய அசோக சக்கரமும் வரைந்துள்ளனர்.

சிறுமிகள் வரைந்த இந்த தேசியக்கொடி பற்றிய வீடியோவை கலாம் உலக சாதனை அமைப்புக்கு அனுப்பி வைத்தனர். அந்த அமைப்ைப சேர்ந்த குழுவினர், இதனை அங்கீகரித்து இருப்பதாக தகவல் அனுப்பி இருப்பதாக சிறுமிகளின் தந்தை பிரபாகர் கூறினார். சிறுமிகளை உறவினர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.


Next Story