தேசியக்கொடி திட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம்


தேசியக்கொடி திட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம்
x

தஞ்சையில் தேசியக் கொடி திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் தபால்துறை சார்பில் நடந்தது. இதனை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்


தஞ்சையில் தேசியக் கொடி திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் தபால்துறை சார்பில் நடந்தது. இதனை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு நடைபயணம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள வீடு தோறும் தேசிய கொடி திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை கோட்ட தபால்துறை சார்பில் நடந்த இந்த நடைபயணத்தை முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்தார்.நடைபயணம் தஞ்சை திலகர் திடலில் இருந்து தொடங்கி ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி, அண்ணாசிலை வழியாக தஞ்சை தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது. இதில் ஓய்வு பெற்ற இயக்குனர் சந்தான ராமன், ஓ்யவு பெற்ற முதுநிலை கண்காணிப்பாளர் எழில், உதவி கண்காணிப்பாளர்கள் பிரேம் ஆனந்த், உமாபதி, கணேஷ்குமார் மற்றும் தபால்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ரூ.25-க்கு தேசியக்கொடி

இதில் தஞ்சை கோட்ட முதுநிலை தபால்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி எற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதற்காக தஞ்சை தபால் கோட்டத்தில் அனைத்து தலைமை மற்றும் துணை, கிளை தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது"என்றார்.


Next Story