தேசியக்கொடி விற்பனை தொடக்கம்


தேசியக்கொடி விற்பனை தொடக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2023 2:30 AM IST (Updated: 12 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


வால்பாறை,


76-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் நிலையங்களில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயசீலன் உத்தரவின் பேரில், வால்பாறை தபால் நிலைய அதிகாரி அழகுராஜ் தேசியக்கொடி விற்பனையை வால்பாறை தபால் நிலையத்தில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதுகுறித்து ஆரம்ப காலத்தில் தபால் பட்டுவாடா பணியாளர்கள் பயன்படுத்திய சீருடையுடன் சிறுவனை நிறுத்தி வைத்து தபால் நிலைய பணியாளர்கள் தேசியக்கொடி விற்பனை செய்வதை அறிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரூ.25-க்கு தேசியக்கொடியை 110 பேர் வாங்கி சென்றனர். இதேபோல் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Next Story