மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு தேசிய அடையாள அட்டை


மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு தேசிய அடையாள அட்டை
x

மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு தேசிய அடையாள அட்டை

தஞ்சாவூர்

கரம்பயம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நேற்று பழஞ்சூர் ஊராட்சி மன்ற சமுதாய கூடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவுசல்யா கவுதமன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரை. இளங்கோ முன்னிலை வகித்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் பெறுவதற்கு 35 பேரும், சமூக நலத்துறையின் மூலம் உதவித்தொகை பெறுவதற்கு 15 பேரும் பதிவு செய்யப்பட்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி வெங்கடாசலம், நெற்கதிர் மாற்றுத்திறனாளி முன்னேற்ற நலச் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுதாகர், மகளிர் அணி மாவட்ட செயலாளர் அகிலா, பட்டுக்கோட்டை ஒன்றிய துணைத்தலைவர் நல்லதம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story