தேசிய சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா


தேசிய சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
x

தேசிய சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருச்சி

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகத்தின் 4-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியுமான ராஜா தலைமை தாங்கி பேசும்போது, டாக்டர்கள், என்ஜினீயர்கள் உள்பட அனைவரும் கோவிலுக்கு சென்று தங்கள் குறைகளை கூறுவார்கள். ஆனால் கோவிலுக்கு ஒரு நிலப்பிரச்சினை, சிலை கடத்தல் பிரச்சினை என்றால் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே வக்கீல் தொழில் உன்னதமான பணி ஆகும் என்றார். சிறப்பு விருந்தினராக ஒடிசா மாநில உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி முரளிதர் கலந்து கொண்டு பேசும்போது, திருச்சி உலக புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலைக் கொண்டுள்ளது. மதத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் நம்பிக்கை கொண்ட வைணவ துறவி ராமானுஜரின் இல்லமாக இது இருந்தது. இந்த கோவிலின் கட்டிடக்கலை அற்புதம் என்றார். முன்னதாக தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எலிசபெத் வரவேற்று பேசினார். விழாவில் 116 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பல்கலைக்கழக பொதுக்குழு, நிர்வாகக்குழு மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story