தேசிய அளவிலான கார் பந்தயம்


தேசிய அளவிலான கார் பந்தயம்
x

தேசிய அளவிலான கார் பந்தயம்

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே தேசிய அளவிலான கார் பந்தயம் நடந்தது. இந்த முதல் சுற்று பந்தயத்தில் மங்களூருவை சேர்ந்த வீரர்கள் முதலிடத்தை பிடித்தனர்.

கார் பந்தயம்

கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்டு தோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரேலி ஆப் கோயம்புத்தூர் ரவுண்ட் 2023 என்ற பெயரில் தேசிய அளவிலான கார் பந்தயம் நடைபெற்றது. இதன் தொடக்க விழா பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கேத்தனூர் காற்றாலை கார் பந்தய மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

மொத்த பந்தய தூரமாக 63 கிலோ மீட்டர், 66 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 வீராங்கனைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பந்தயத்தில் 76 கார்கள் கலந்து கொண்டன.

முதல் பரிசு

இந்தப் போட்டிகளில் முதல் சுற்றில் மங்களூரைச் சேர்ந்த அர்ஜுன் ராவ், சதீஷ் ராஜகோபால் ஜோடி முதல் இடத்தையும், டெல்லியை சேர்ந்த பிலிப், மூர்த்தி ஜோடி இரண்டாம் இடத்தையும், கொல்கத்தாவை சேர்ந்த அமிர்த ரஞ்சித் கோஸ், அஸ்வின் நாயக் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதன் அடுத்த சுற்று போட்டிகள் ஐதராபாத், பெங்களூரு மற்றும் கூர்க் நகரங்களில் நடைபெற உள்ளதாக போட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர். தேசிய அளவிலான கார் பந்தயத்தில் கார்கள் சீறிப்பாய்வதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.



Next Story