தேசிய அளவிலான சிலம்ப போட்டி


தேசிய அளவிலான சிலம்ப போட்டி
x

தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி:

தேசிய அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. உலக சிலம்ப கோர்வை அகடமி, உலக சிலம்ப யூத் பெடரேஷன் இணைந்து நடத்திய இந்த போட்டியில் 400 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளை சுவாமி சத்யானந்தர், தமிழ்நாடு சிலம்ப கோர்வை துணை தலைவர் மோகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மழலையர், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுகம்பு வீச்சு, இரட்டை கம்பு, கம்புச்சண்டை தொடுமுறை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளின் முடிவில் 75 புள்ளிகளை பெற்ற மண்ணை மகாலிங்கம் சிலம்ப கழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2-வது இடத்தை சீர்காழியை சேர்ந்த மாவீரன் சிலம்ப கழகம் 69 புள்ளிகளுடன் பிடித்தது. 56 புள்ளிகளை பெற்ற வீரபாண்டி சிலம்ப கழகம் 3-வது இடத்தை பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Next Story