தேசிய அளவிலான கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி


தேசிய அளவிலான கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
x

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.

அரியலூர்

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பீட் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 9 மாநிலங்கள் பங்கு பெற்றன. அரியலூரை சேர்ந்த ராஜ்மகேஷ்வரன் தலைமையிலான தமிழக அணி இறுதிப்போட்டியில் பாண்டிச்சேரி அணியை வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி 17 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் முதன் முறையாக தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் சிறந்த மட்டை வீரராக அரியலூரை சேர்ந்த சன் மேக்கர் 258 ரன்கள், சிறந்த பந்துவீச்சாளராக கோபிநாத் 6 விக்கெட், முத்து ராசா 6 விக்கெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொடருக்கான நாயகன் விருதை சன் மேக்கர் பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்கள் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Next Story