தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி


தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி
x

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த 1-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. போட்டிகள் அனைத்து வயதினருக்கும் (18 வயது வரை ஒரு பிரிவாகவும், 18 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகவும்) நடத்தப்படுகிறது. போட்டிக்கான கடிதத்தை "புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் உள்நாட்டு கடிதம் அல்லது கடித உறை பிரிவில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

உள்நாட்டு கடித பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர் அல்லது நிறைவு பெறாதவர் என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். மாணவர்கள் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டும். போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம் / ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம் / ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் / ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


Next Story