ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்


ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது..

ராணிப்பேட்டை

ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது..

கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணயிரியல் துறை சார்பில் நுண்ணுயிர்களின் எதிர்காலம் மற்றும் பயன்பாடு பற்றிய ஆராய்ச்சி என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் அ.முகமது சாதிக் தலைமை தாங்கினார். நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் ஏ.ஜேசு ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு பேசுகையில், 'நுண்ணுயிரியல் நீண்டகாலமாக அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. நுண்ணுயிரிகள் அனைத்து துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் பெறும் பங்கு வகிக்கிறது' என்றார்.

சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் வி.கோபிகிருஷ்ணன் பேசுகையில், 'ஆக்டினோ பாக்டீரியா மருத்துவரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ள இயற்கை பொருட்களை பரவலாக உற்பத்தி செய்கிறது. இது மண்ணின் வளத்திலும், வண்டல் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றுகிறது என்று கூறினார்.

கருத்தரங்கில் மாணவ-மாணவிகள் தங்கள் ஆய்வு கட்டுரைகள் மற்றும் சுவரொட்டிகளை சமர்ப்பித்தனர். அதில் சிறந்த கட்டுரைகள் மற்றும் சுவரொட்டிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியை மா.செல்லக்கண்ணு நன்றி கூறினார்.


Next Story