தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: பெரம்பலூர் மாவட்ட வீரர்-வீராங்கனைகள் சாதனை


தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: பெரம்பலூர் மாவட்ட வீரர்-வீராங்கனைகள் சாதனை
x

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட வீரர்-வீராங்கனைகள் வென்று சாதனை படைத்தனர்.

பெரம்பலூர்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

இந்திய இளைஞர் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கத்தின் 2-வது ஆண்டு தேசிய அளவிலான சிலம்பம் போட்டி உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக அணிக்காக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்ப வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒற்றை கம்பு சிலம்பம் சுற்றும் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த அனிசா, 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கனிகா, 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் சுஜன் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.

பதக்கம், பாராட்டு சான்றிதழ்

இரட்டை கம்பு சிலம்பம் சுற்றும் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த லோகித் முதலிடத்தை பிடித்தார். ஒற்றை கம்பு சிலம்பம் சுற்றும் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலத்தை சேர்ந்த சச்சின் 2-ம் இடத்தையும், அதே ஊரை சேர்ந்த கவின் 3-ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த சக்திநந்தனா 3-ம் இடத்தையும், 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஆலத்தூர் தாலுகா இரூரை சேர்ந்த ஜெயவர்ஷினி 3-ம் இடத்தையும் பிடித்தனர். முதல் இடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவருக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெற்றி பெற்று சாதனை படைத்து, பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர்-வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும், பயிற்சியாளர் ராஜேந்திரனும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர்கள் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Next Story