தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி


தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
x

விழுப்புரத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு ரத்தச்சோகை விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகளை பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய ஊட்டச்சத்தின் பயன்கள் குறித்த விளம்பர வாகனம் மற்றும் பேரணியை கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்தின் அவசியம் மற்றும் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் தீமைகள் குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்துறை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.




Next Story